மொழிப் புலமையும் பட்டறிவும் கொண்ட எமது தமிழாசிரியரைக் காண்க. பல்லினப் பண்பாட்டுச் சூழலில், தமிழ் பயிற்றுவிப்பதில் சீரிய முனைப்போடும் விருப்போடும் உழைப்பவர்கள் எம் ஆசிரியப் பெருந்தகைகள். அடுத்த தலைமுறை தமிழைப் பேசவும் தமிழராய் வாழவும் வேண்டும் என்ற கனடாத் தமிழ்க் கல்லூரியின் நோக்கத்தை நிறைவு செய்யத் தளராது உழைக்கும் அவர்களின் பணிக்கு எமது நன்றியும் வாழ்த்தும்.