இடைநிலைக் கலைப்பிரிவானது இரண்டு வளாகங்களில் இயங்கி வருகின்றது.
தமிழ் மொழியை மட்டுமல்லாது தமிழரின் கலைகளும் காக்கப்படவேண்டும். அடுத்த தலைமுறையிடம் முறையாகக் கையளிக்கப்படல் வேண்டும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ் இளையோருக்கான கலைப் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பெற்று, நுண்கலைத் திறமைநெறி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வகுப்புகளில் இணைவதன் ஊடாக,
> 30 வகுப்புகளில் ஒரு திறமைத் தேர்ச்சியைப் பெறலாம்.
> ஒன்ராறியோ மேல்நிலைப் பள்ளித் திறமைச் தேர்ச்சிகளில் நான்கைப் பெறலாம்.
> உங்கள் சராசரி மதிப்பெண்ணைக் கூட்டிப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நுழைவுக்குக் கூடுதல் வாய்ப்பு உண்டு.
> பள்ளிக்கூட வேலைப் பளுவைக் குறைக்கும்.
> கலைத் திறமைநெறி மதிப்பெண்கள் பல்கலைக் கழக புலமைப் பரிசில் பெற உதவும்.
> கலைத் திறமைநெறி பிற பாடத் திறமை நெறிகளுக்கு ஒப்பானது.
அனைத்துக்கும் மேலாக,
இக்கற்கைநெறியானது தமிழரது கலைகள் பற்றிய ஆழ்ந்து அகன்ற அறிவைப் பெறவும் உதவுகின்றது.
இப்பயிற்சி நெறியை ரொரன்ரோக் கத்தோலிக்கக் கல்விச்சபையோடு இணைந்து நடத்தி வருகிறோம்.
பின்வரும் கலைப் பாடங்களில் மாணவர் இணைந்து. நான்கு தேர்ச்சிகளைப் பெறமுடியும்.
வாய்ப்பாட்டு
நடனம்
வீணை
புல்லாங்குழல்
வயலின்
தண்ணுமை
கின்னரம்