இடைநிலைத் தமிழ்ப் பிரிவானது ஒன்பது வளாகங்களில் இயங்கி வருகின்றது.
கல்லூரியின் நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஆக்கப் பெற்ற பாடநூல்களை இவ்வகுப்புகளில் கற்பிக்கின்றோம்.
இவ்வகுப்புகளில் இணைவதன் ஊடாக,
> 30 வகுப்புகளில் ஒரு திறமைத் தேர்ச்சியைப் பெறலாம்.
> தமிழ் கற்பதன் மூலம் ஒன்ராறியோ மேல்நிலைப் பள்ளித் திறமைச் தேர்ச்சிகளில் மூன்றைப் பெறலாம்.
> உங்கள் சராசரி மதிப்பெண்ணைக் கூட்டிப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நுழைவுக்குக் கூடுதல் வாய்ப்பு உண்டு.
> பள்ளிக்கூட வேலைப் பளுவைக் குறைக்கும்.
> தமிழ் திறமைநெறி மதிப்பெண்கள் பல்கலைக் கழக புலமைப் பரிசில் பெற உதவும்.
> தமிழ்த் திறமைநெறி பிற பாடத் திறமை நெறிகளுக்கு ஒப்பானது.
அனைத்துக்கும் மேலாக,
இக்கற்கைநெறியானது தமிழ் மற்றும் தமிழர் பற்றிய ஆழ்ந்து அகன்ற அறிவைப் பெறவும் உதவுகின்றது.
இப்பயிற்சி நெறியை ரொரன்ரோக் கத்தோலிக்கக் கல்விச்சபையோடு இணைந்து நடத்தி வருகிறோம்.