Competitive Examination - Math, English

Competitive Examination - Math, English 

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது "

தமிழோடு ஏனைய துறைகளிலும் தமிழ் மாணவர் பெருமையுறல் வேண்டும். இந்த நோக்கை நிறைவேற்றும் வகையில் மூன்று வகையான திறன் தேர்வுகள் கல்லூரியால் நடத்தப்பட்டு வருகின்றன.

Mathematics/ English Competitive Exams

Applications are accepted through the website from 1st January to 1st April every year. 
Exams will be held in May. The exam results will be announced on the app and website. Award Ceremony will be held on the second week of June. 

These exams are conducted for students studying from Kindergarten to 8th standard. The examination papers for each grade are prepared by the teachers as per the syllabus of the Ontario Ministry of Education. As this exam is a general exam, parents can know the knowledge level of the student in the field. In this case, parents can provide additional assistance to the student.

Mathematics/ English
Students from Kindergarten to Grade 8 can participate.

To Register: https://www.tamilacademy.org/applications/newpagee3ab215e

கணிதம் - ஆங்கிலம் 

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1ஆம் நாளிலிருந்து ஏப்ரல் 1ஆம் நாள்வரை விண்ணப்பங்கள் இணையத் தளம் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் தகவல் செயலி மற்றும் இணையத் தளத்தில் அறிவிக்கப்படும். மாணவருக்கான மதிப்பளிப்பு யூன் இரண்டாம் கிழமை நடைபெறும்.  

இளமழலை முதல் தரம் 8 வரை பயிலும் மாணவருக்காக இத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தரத்துக்குமான தேர்வுத் தாள்கள், ஒன்றாரியோ மாகாணக் கல்வி அமைச்சின் பாடத் திட்டத்துக்கு அமைய, ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்தேர்வாக இத்தேர்வு அமைவதால், மாணவரின் துறை சார்ந்த அறிவு நிலையை பெற்றோர் அறியலாம். இந்நிலையில் மாணவருக்கான மேலதிக உதவிகளைப் பெற்றோர் வழங்க முடியும். 

கணிதம்/ ஆங்கிலம் 
இளமழலை முதல் தரம் 8 வரையான மாணவர்கள் பங்கு கொள்ளலாம். 


பொது அறிவுப் போட்டி


எமது தமிழ் மாணவரது தமிழ்க் கல்வியிற் காட்டும் அக்கறை போன்று, பொது அறிவிலும் அவர்களது அறிவையும் திறமையையும் வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்க வேணடுமென்பதில் கனடாத் தமிழ்க் கல்லூரி அக்கறை கொண்டுள்ளது. அந்த வகையில் மாணவரது பொது அறிவினை மேம்படுத்தும் நோக்கோடு பொது அறிவுப் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. ஒக்டோபர் 1ஆம் நாளில் இருந்து சனவரி 1ஆம் நாள்வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் போட்டி நடைபெறும். முடிவுகள் தகவல் செயலி மற்றும் இணையத் தளத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பெற்று செப்டெம்பர் மாதத்தில் மதிப்பளிப்பு நடைபெறும். 

கனடாத் தமிழ்க் கல்லூரியின் வளாகங்களில் கல்வி கற்கும் மாணவர்களும் கற்காத மாணவர்களும் இதில் பங்கு பற்ற முடியும்.  

போட்டியாளருக்கு வினாக்கொத்து விண்ணப்பிக்கும் நாளன்று தரப்படும். போட்டிகள் ஆங்கில மொழியில் பல்தேர்வு வினாத் ( Multiple Choice ) தேர்வாக அமையும்.  

வினாக்கள் அறிவியல், கணிதம், கணினி, அரசியல், புவியியல், சமூகவியல், விளையாட்டு, வரலாறு, கலை, இலக்கியம் சார்ந்தவைகளாக அமையும். 

போட்டி நாளில் வினாக்கொத்தில் தரப்படாத பத்து வினாக்கள் வினவப்படும். தரப்பட்ட நேரத்துக்குள் தேர்வு நிறைவுறும். வினாத்தாள்கள் உடனும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். 

விண்ணப்பங்களை இணையத்தளம், தகவல் செயலி, வளாகங்கள் மற்றும் தலைமைப் பணிமனையில் பெற்றுக் கொள்ளலாம். 

போட்டியாளர் தமது வகுப்பு எல்லைக்குரிய பிரிவில் மட்டுமே பங்குபற்றலாம்.  

போட்டியாளர் ஒவ்வொருவரும் நுழைவுக் கட்டணமாக $25 கனடிய வெள்ளிகள் செலுத்த வேண்டும்.  

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளருக்கு வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் பரிசளிப்பு நாளன்று வழங்கப்படும். 

பங்கு பற்றும் அனைத்துப் போட்டியாளருக்கும் பங்கு பற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்படும். 

சொல்வண்டு 


ஆங்கில மொழியில் இப்போட்டிகள் நடைபெறும். தரம் 1 முதல் தரம் 8 வரை கற்கும் மாணவர் இப்போட்டிகளில் பங்கு பற்றலாம். நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை, ஒக்ரோபர் மாதத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.  

ஏப்ரல் 1ஆம் நாளில் இருந்து யூலை 31ஆம் நாள்வரை விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் நாளன்று சொல்வண்டுக் கோவை தரப்படும்.

பிரிவு அ - தரம் 1, தரம் 2
பிரிவு ஆ - தரம் 3, தரம் 4
பிரிவு இ - தரம் 5, தரம் 6
பிரிவு ஈ - தரம் 7, தரம் 8

இப்போட்டியில் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி இணைப்பதன் ஊடாகக், கீழ்க்காணும் பயன்களை அவர்கள் அடையக் கூடியதாக இருக்கும். 

இலக்கணம் கற்றல்
புதிய சொற்களை அறிவதோடு, சொல்லின் பகுதி, விளக்கம், உச்சரிப்பு, பேச்சின் பகுதி, வாக்கியம் என்பவற்றை அறிவர். 

சொற்களஞ்சியம்
சொல்வண்டில் இணைவதன் ஊடாக பல புதிய சொற்களை அறிவார்கள். இது அவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து வன்மையைக் கூட்டும் என்பதோடு பல வகையான நூல்களை வாசிக்க ஊக்கம் அளிக்கும்.
  
போட்டி உணர்வு
சொல்வண்டானது ஒரு பாதுகாப்பான போட்டிச் சூழலை உருவாக்குகின்றது. நட்பான இத்தகு சூழலில் போட்டியாளருக்குத் தன்னோடு போட்டி போடும் ஏனைய போட்டியாளரை தான் வெல்லல் வேண்டும் என்ற உணர்வு தோன்றும். மூளையின் செயற்பாடு அதிகரிக்கும். போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கும் இவ்வுணர்வு தோன்றும்.  

அகன்ற அறிவு
சொற்களை அறிவது, அச்சொற்களின் வேர்களைத் தேடத் தூண்டும். சொல்லகராதிகளைப் படிக்கச் சொல்லும். இச்செயற்பாடானது, இளவயதிலேயே அவர்களைப் புதிய புதிய சொற்களை அறிவதற்கு வழிவகுக்கும். 

அறிவுத் திறன்கள்
சொல்வண்டானது உங்கள் குழந்தைகளின் அறிவுத் திறன்களை வளர்க்க உதவும். சூழ்நிலை அழுத்தத்தை கையாளும் திறன், நினைவாற்றல் திறன் என்பன பிற்காலத்தில் அவர்கள் உயர்கல்வி கற்கும் பொழுது அவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.     

தன்னம்பிக்கை
சொல்வண்டு போன்ற போட்டிகளில் பங்குபற்றும் பொழுது, குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை பிறக்கின்றது. தலைமைத்துவப் பண்புகளை அறிகின்றனர். மக்கள் முன்னால் கூச்சம் இன்றிப் பேசும் ஆற்றலைப் பெறுகின்றனர். தவறுகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் மக்களின் பாராட்டுகளையும் பெறுவர்.  

சில வேளைகளில் உங்கள் பிள்ளளைகள் வெற்றி பெறாமல் போனாலும் கூட, சொல்வண்டுப் போட்டியின் பொழுது அவர்கள் அதிக அளவிலான சொற்களையும் தன்னம்பிக்கையையும் பெறுவார்கள். 

The CTA also offers various opportunities for students to engage in friendly competitions in various divisions of  English and Math that are based on the Ontario Curriculum. In addition, the CTA annually General Knowledge contests. These competitions provide a platform for Canadian Tamil students to show off their knowledge and strengths as well as build their confidence.
Share by: