உயர்நிலை

உயர்நிலை

தமிழ்மொழி, தமிழிலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழர் வரலாறு, யோகா என்பன பற்றிய அறிவை பெருக்க விழைவோர்க்கு ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கோடும் அவற்றை எதிர்காலத்தில் கனடாவில் கற்பிக்க வல்ல நல்லாசிரியரை உருவாக்க வேண்டுமென்ற விருப்போடும் தமிழியல் பட்டப்படிப்பை நடத்தி வருகிறோம். 

இப்பயிற்சி நெறியானது தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு நேரடியாக இணைந்த நிலையில் நடைபெற்று வருகின்றது. 

இவ்வகுப்புகளில் மரபு அடிப்படையிலான தமிழ் இலக்கிய – இலக்கணங்கள் பண்பாட்டுக் கூறுகள்சார் பாடங்கள் தமிழர் கலைகள் மட்டுமன்றி வேலை வாய்ப்புத் தேவைகளைக் கருத்திற் கொண்ட பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. 

இவ்வகையில் கற்பித்தலியல், ஊடகவியல், மொழிபெயர்ப்பியல், ஆங்கிலம் முதலிய பாடங்களையும் உள்ளடக்கியதாக இக்கற்கைநெறி அமைந்துள்ளது.

துறைகள்

தமிழ்
நுண்கலைகள்
ஓகம் (யோகா)

குறிப்பு

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் உயர்வகுப்புகளில் நேரடியாக இணைவதற்காக, அடிப்படைக் கற்கைநெறி வகுப்புகள் (Foundation) மூன்று துறைகளுக்கும் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்


 அடிப்படைக் கற்கைநெறி 1 – தரம் 11 (Tamil Foundation 1)
அடிப்படைக் கற்கைநெறி 2 – தரம் 12 (Tamil Foundation 2)
பட்டயம் – இரண்டு ஆண்டுகள் (Diploma In Tamil – 2 Years)
பட்டப்படிப்பு – மூன்று ஆண்டுகள் (B.A. in Tamil – 3 Years)
பட்டப் பின்படிப்பு – இரண்டு ஆண்டுகள் (M.A. in Tamil – 2 Years)
முனைவர் பட்டத்துக்கான ஆய்வு

ஓகம் (யோகா)


Foundation Course 
Diploma in Yoga – 1 year
Post-Graduate Diploma – 1 Year
 B.Sc in Yoga – 3 Year
 M.Sc in Yoga – 2 Year

நுண்கலைகள்


Vocal, Bharatham, Instruments Veena, Violin, Flute, Nadaswaram and Keyboard, Miruthangam, Mandolin, and Saxophone

அடிப்படைக் கற்கைநெறி 1 – தரம் 6 (Foundation 1)
அடிப்படைக் கற்கைநெறி 2 – தரம் 7 (Foundation 2)
 பட்டயம் (Diploma – 2 Years) 
பட்டப்படிப்பு – நான்கு ஆண்டுகள் (B.F.A – 4 Years)
 பட்டப் பின்படிப்பு (M.F.A – 2 Years)
முனைவர் பட்டத்துக்கான ஆய்வு

Higher Education in Tamil


In addition to Tamil Language programs at the elementary and secondary levels, the CTA has also been conducting classes for Diplomas, Bachelors and Masters degrees in Tamil language, Fine Arts and Yoga since 1999. We are privileged to provide degree programs in Tamil Studies in collaboration with the Annamalai University of Tamil Nadu. 


This program aims to provide a learning space for those who intend to broaden their knowledge of Tamil Studies and delve deeper into research within this field. In doing so, the CTA strives to empower and encourage students to become teachers of Tamil Studies in Canada.
Share by: