கலை ஆழி

கலை ஆழி - கலை வகுப்புகள்

All Locations
LIST MAP

எமது தமிழ் மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றில், விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்பவை' - தலைவர் வே. பிரபாகரன்.
 
  
தமிழ் மரபில் நுண் கலையானது மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றை உடையதாகும். இது இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு பரந்து விரிந்துள்ளது.
  
எவ்வினத்துக்கும் இல்லாத பெருமை என நாம் பெருமை கொள்ளத் தக்கவாறு இக்கலையின் வரலாற்று ஆதாரங்கள் எம்மிடமுண்டு. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரச் செய்யுள்கள் என்பன தொடக்ககால வரலாற்று ஆதாரங்களாக எம்மிடம் உண்டு. இடைப்பட்ட ஆண்டுகளில் அயலார் ஆட்சியில் தமிழ்மொழியானது ஆட்சி அதிகாரத்தை இழந்தபோது, அயலார் மொழிகள் தமிழ்க் கலைகளுக்குள் நுழைந்தன. இம்மொழிகளின் தாக்கம் இன்றுவரை இருப்பதை, நாம் கண்கூடாகக் காண்கின்றோம். 

பழந்தமிழரின் சதிராட்டமானது இன்று பரதநாட்டியமானதையும் தமிழிசை, கர்நாடக இசையாகியதையும் எவரும் மறுக்கவியலாது.
   
புலம்பெயர் சூழலில், நந்தமிழ்ப் பிள்ளைகள் தமது அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கு மொழி காக்கப்படல் வேண்டும். அம்மொழியின் பயன்பாடு, அம்மொழிக்குரிய கலைகளிலும் பேணப்படல் வேண்டும்.   

எமது பண்பாட்டு விழுமியங்களோடு நெருக்கமான உறவுடைய தமிழ் நுண்கலைகளானது, தனக்கான மொழியின் அடையாளத்தை இழக்கக் கூடாது. தமிழ் மொழியோடு தமிழ்க் கலைகளையும் வளர்ப்பதும் பேணுவதும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகின்றது. 

கனடாவில் தமிழ்க்கலைகள் வளர்க்கும் பல ஆசிரியர்களை அரவணைத்து, அவர்களின் மேன்மைக்கும் பணிக்கும் வழிகாட்டியாய் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் கனடாத் தமிழ்க் கல்லூரியின் நுண்கலைப் பிரிவான, 'கலை ஆழி' , மேற்கூறப்பட்ட நோக்கத்தை அடைவதற்காக உழைத்து வருகின்றது. 

கலை ஆழியில் தம்மை இணைப்பதன் மூலம் தமிழ்த்தாயின் கலைகளைக் காப்போம் என அனைத்துக் கனடா வாழ் கலை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். 
Share by: